2012-02-04

  மல்வத்தை மகாநாயக்க தேரரின் வாழ்த்துச் செய்தி

மல்வத்தை மகாநாயக்க தேரரின் வாழ்த்துச் செய்தி

‘தெவொ வஸ்ஸது காலென - ஸஸ்ச சம்பத்தி ஹேதுச
பித்தோ பவத்து லோகோச்ச - ராஜா பவத்து தம்மிகோ’

1818 மார்ச் 2 ஆம் திகதி ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தபோது இலங்கை அதன் இறைமையை மற்றும் சுய அரசாங்கத்தை இழந்தது மட்டுமன்றி எமது பாரம்பரிய சனநாயக நிர்வாக முறைமை, வழுக்காறுகள், சமயம், கல்வி, நிலம், விவசாயம் மற்றும் அனைத்தையும் இழந்தது. அந்நிய சக்தியில் இருந்து வென்ற பின்னர் 1948 பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திரம் அடைந்து ஏனைய நாடுகளிற்கு இலங்கையின் மகத்துவத்தை அடையாளப்படுத்தும் முகமாக எமது தேசிய கொடி ஏற்றப்பட்டது.

சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதன் முக்கிய நோக்கமாக, நன்றியுணர்வுடன் நாட்டிற்கு சுதந்திரத்தையும் விடுதலையையும் பெற்றுக் கொடுக்க தமது வாழ்க்கையை அர்ப்பணித்த மகா வீரர்களையும் இன்றைய தலைமுறையினர் கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்பதற்கும் அவர்களின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தினை அர்த்தமுள்ள தாக்குவதற்கும் வழியமைப்போம்.

சுதந்திரத்தின் உண்மைத் தன்மையை உணரச் செய்வதையும் நினைவு கூருவதாக இருத்தல் வேண்டும். சுதந்திரத்தினை வென்றதனூடாக மேற்கொள்ளப்பட வேண்டிய மிகவும் முக்கியமான பணி என்னவெனில் மக்களின் பொருளாதார மற்றும் ஆன்மீகத்தினை அபிவிருத்தி செய்தலாகும்.

இந்த நோக்கத்திற்காக பெளத்த சனநாயக அரசியல் முறைமையை கடைப்பிடித்தல் மிகவும் முக்கியமானதாகும். அதன்படி, பெளத்தத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது. ஆனால் தேசிய இனங்களான தமிழர், முஸ்லிம், பறங்கியர் எல்லோரும் ஒன்றாக இணைந்து மனித சமூகத்தின் முன்னேற்றம் பொருட்டு செயற்படுதல் வரவேற்கத்தக்கது.

மும்மணிகளதும் புனித தந்தத்தினதும் ஆசீர்வாதத்துடன் மும்மாரி பொழிவதற்கும், வளமான நாடாவதற்கும் நான் மிகவும் ஆர்வத்துடன் பிரார்த்திக்கின்றேன்.
 

கண்டி விகாராதிபதி உபோஷித புஸ்பாராம பிரதான மடாதிபதி அதிவணக்கத்துக்குரிய

திப்பட்டுவாவே ஹீ சித்தார்த்த சுமங்கள மஹாநாயக்க தேரர்,

சயாமோபாலி மஹாநிகாயே மல்வத்து மஹாவிகாரை

கண்டி

அஸ்கிரிய மகாநாயக்க தேரரின் வாழ்த்துச் செய்தி

இலங்கையின் 64வது சுதந்திர தினத்தினை நினைவுகூரும் நிகழ்வில் இந்த வாழ்த்துச் செய்தியினை தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். விஜயனின் வருகையுடன் வரலாற்று ஆவணங்களின் பிரகாரம் பாராட்டப்பட்ட எமது கலாசாரம், கல்வி, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சுதந்திரம் 1505 இல் போர்த்துக்கேயரின் படையெடுப்பால் இழக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இந்த இலங்கைத் தீவு ஒல்லாந்த மற்றும் ஆங்கிலேயர் காலணித்துவத்திற்குட்பட்டு 1948 இல் அதன் சுதந்திரத்தை அடைந்தது. அந்த வருடங்கள் முழுவதும் பல்வேறு சவால்களையும் தடைகளையும் அனுபவித்ததைத் தொடர்ந்து, எமது நாடு இந்த ஆண்டு அதன் 64வது ஆண்டு நிறைவு சுதந்திர தினத்தினைக் கொண்டாடுகின்றது. இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வில் இந்த நாட்டின் சுதந்திரத்தை அடைவதற்கு தமது உயிர்களை அர்ப்பணித்த சிறந்த மதத் தலைவர்களையும் சாதாரண மக்களையும், மிகவும் நன்றியுணர்வுடன் நினைவு கூருதல் வேண்டும்.

எமது நாடு பயங்கரவாதத்தில் இருந்து விடுதலை பெற்ற போதிலும் இலங்கையரிடையே பொதுவான நோக்கும் கூட்டான சிந்தனையும் இல்லாததன் காரணமாக நிலையான அபிவிருத்தியை நோக்கி எமது நாடு செல்ல இன்னும் தவறி வருகின்றது என்பதனை நாங்கள் நம்புகின்றோம். இந்த 64வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் சந்தர்ப்பத்தில் நாம் சுயநலமின்றி எல்லோரும் இலங்கை பிரசைகள் என்று ஒருமித்து சிந்திக்கும்வரை பெற்றுக் கொண்ட சுதந்திரம் முழு அர்த்தம் பெறாது.

‘சங்சா சாதவம் சமவதர்தம் சன்வோ மாம்சி ஜனஹாம்’ என்று உபநிடதத்தில் உள்ளவாறு ஒன்றாகப் பயணிப்போம், ஒன்றாகப் பேசுவோம் உங்கள் மனம் ஒத்திசைவாக இருக்கட்டும். நாட்டின் நலன் கருதி உண்மையாக விரும்பும் அனைத்துப் பிரசைகளினதும் முகப்பு வாசகமாக இருத்தல் வேண்டும்.

மும் மணிகளினதும் ஆசீர்வாதத்துடனும், புனித தந்தத்தின் கருணையினாலும் நான் இலங்கை முழுச் சனத்தொகையின் அனைத்து நல்ல விருப்பங்களும் முழுதாக நிறைவேற இந்த 64வது சுதந்திர தினம் அமையட்டும் என்று நான் மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன் என்று தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இலங்கை நாடு சுதந்திரம் அடைந்து 64 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள இந்நாளில் எமது நாட்டு மக்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வாழ்த்துச் செய்தியை விடுப்பதில் மகிழ்ச்சியடைகிறது. மேலும் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்த எமது நாட்டை பாதுகாத்த அரசுக்கும் அதன் முப்படைத் தளபதிகளுக்கும் வீரர்களுக்கும் நன்றிகூரக் கடமைப்பட்டுள்ளது.

மன்னர்கள் காலந்தொட்டே இந்த நாட்டில் வாழ்ந்த முஸ்லிம்கள் நாட்டுத் தலைவர்களுக்கும் நாட்டுக்கும் விசுவாசமுள்ளவர்களாகவே இருந்து வந்துள்ளனர். கடந்த 3 தசாப்த கால யுத்தத்தின் போதும் கூட வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டதற்கான காரணமும் அவர்கள் இலங்கை நாடு பிளவுபடவோ இலங்கை அரசாங்கங்களுக்கு எதிராக செயல்படவோ விரும்பாததன் காரணத்தினாலாகும். இன்றும் பல்லாயிரக்கணக்கான வடக்கு முஸ்லிம்கள் அகதிகளாக வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இனி இந்த நாடு பூரண சுதந்திரமடைந்து அமைதி ஏற்பட்டிருக்கும், இச்சந்தர்ப்பத்தில் இந்நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னெடுத்துச்செல்வதற்கான காலம் கனிந்துள்ளது. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என பிளவு படாது நாம் எல்லோரும் இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட ஒவ்வொரு பிரஜையும் முன்வரவேண்டும்.

நாடு செழிக்க நட்புறவோடு வாழ்வோம்....
ஐக்கியமே எனது அச்சாணியாகட்டும்....

இலங்கை நாடே நம் நாடென்று கூறி மகிழ்வோம்.... என்று அசில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷெய் எம். எம். ஏ. முபாரக் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

இராமகிருஷ்ண மிஷன் சுவாமிஜியின்

சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

2012 பெப்ரவரி 4 ஆம் திகதியன்று இலங்கை சோசலிச ஜனநாயகக் குடியரசின் 64 வது சுதந்திர தினத்திற்கு எனது அன்பையும், நல்வாழ்த்துக்களையும் அனுப்புவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் மகிமையை உயர் பீடத்திற்குக் கொண்டு வருவதற்கு அவருடன் இணைந்து உண்மையாக உழைக்கும் சக அமைச்சர்களுக்கும் இறைவனின் அருள்மாரி பொழிவதற்கு நான் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

இந்த சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு, இந்த நாட்டிற்கு கல்வி, பணம், வாய்ப்புக்கள் மற்றும் ஏனைய சமூக பொருளாதார நிலைமைகளை நிறைவு செய்தல் அவசியமாகிறது. இதற்கு ஒருவரின் உடல் உள ஆரோக்கியம் நன்கு அமையப் பெற்றதாக இருத்தல் வேண்டும். இது நாங்கள் காணும் கனவை நனவாக்குவதற்கு சரியான தெரிவுகளையும் கடின உழைப்பையும் வேண்டி நிற்கின்றது. இது சுலபமான பாதையன்று. இந்த சுதந்திரத்திற்கு ஒரு சவரக்கத்தியை நீட்டுவது போல நீண்ட, சிரமமான கடினமான பாதையைக் கடக்க வேண்டியுள்ளது. ‘எழுந்திரு, விழித்திரு, இலக்கினை அடையும் வரை நிறுத்தாதே’ என்று உபநிடதங்கள் எடுத்துக் கூறுகின்றன.

அதிமேதகு ஜனாதிபதியவர்க ளினதும் அவரது நிறைவேற்று குழுவினரது கடின உழைப்பினாலும் வழிகாட்டலினாலும் நாடு பல தடைகளை கடந்துள்ளதுடன் மேலும் தடைகளைக் கடக்கக் கூடியதாக இருக்கும். சகல துறைகளிலும் நாங்கள் இதற்காக வேலை செய்வதற்கும் வெற்றி கொள்வதற்கும் தைரியத்தைக் கொண்டுள்ளோம். இன்று நாம் தனியாளாக, சமுதாயமாக, ஒரு தேசமாக அனுபவிக்கும் சுதந்திரம் எமது முன்னோர்கள் மற்றும் பதவியிலிருந்தவர்களின் கடின உழைப்பினதும் தியாகங்களினதும் பலனாகவே கிட்டியுள்ளது. ஒவ்வொரு துறையிலும் மகிழ்ச்சிகரமானதும், வளமானதும் சமாதானமிக்கதுமான எமது நாளாந்த வாழ்க்கையிலும், எமது தேசத்திற்கும், எம்மனைவருக்கும் இவை மேன்மேலும் கிடைப்பதற்கு இறைவனின் கருணை கிடைக்கட்டும்.
 

தங்கள் இறைபக்தன்

சுவாமி சர்வரூபானந்த

உபதலைவர்/ தலைவர்

இலங்கைக் கிளை.