மீன்பிடி கைத்தொழிலில் எமது நாட்டினை ஆச்சர்யமிக்க வகையில் பொருளாதாரத்தில்
முன்னெடுக்க நடவடிக்கை
மீன்பிடி கைத்தொழிலில் எமது நாட்டினை ஆச்சர்யமிக்க
வகையில் பொருளாதாரத்தில் முன்னெடுக்க நடவடிக்கை
நாட்டிற்கும் மக்களினதும் அபிவிருத்திக்கு பாரிய தடையாக இருந்த நாட்டின் 2/3
பகுதிக்கு மேல் ஆக்கிரமிப்புக்குள் இருந்த எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதம் யுத்தத்தின்
மூலம் முடிவு கட்டுவதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு சுமார் 4 வருடங்கள் சென்றன.
முழு நாட்டையும் ஒரே கொடியின் நிழலுக்கு கொண்டுவந்து முழு நாட்டையும் மீட்டெடுத்த
அரச தலைவராக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுகின்ற மஹிந்த ராஜபக்ஷ
அவர்கள் அவரின் இரண்டாவது பதவி காலம் நிறைவு பெறுவதற்கு முன்பாக இந்நாட்டின்
அபிவிருத்தி யுத்தத்திலும் வெற்றிபெற்று எமது சிறிய நாட்டை ஆசியாவில்
ஆச்சர்யமிக்கதாக ஆக்குவது தின்னம்.
அந்த தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ் மீன்பிடித்துறை பாரிய மாற்றத்தை மஹிந்த சிந்தனை
எதிர்கால நோக்கத்தின் மூலம் ஏற்படுத்தி எமது நாடு ஆசியாவில் ஆச்சர்யமிக்க
நாடாகும்போது மீன்பிடி கைத்தொழில் துறை இந்நாட்டின் பொளாதாரத்தின்
ஆச்சர்யமிக்கதாக்குவதற்கு பங்களிப்பு செய்கின்ற மீனவர் எமது வளமாகும்.
தேசிய மீன் உற்பத்தி (கடல் மற்றும் நன்னீர்) 2009ம் வருடத்தில் 339. 730 மெட்ரிக்
டொன் ஆகும். 2011ம் ஆண்டு நிறைவுபெறும்போது வருடாந்த மீன் உற்பத்தி 4 இலட்சத்தால்
அதிகரித்தலும் அது எதிர்வரும் வருடங்களில் பலவற்றில் படிப்படியாக விருத்தி
செய்யப்பட்டு 2013ம் வருடம் அளவில் வடக்கு கிழக்கு கடல் மீன் உற்பத்தி நூற்றுக்கு
43 ஆகவும் ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடல் உற்பத்தி நூற்றுக்கு 194 ஆகவும் சர்வதேச
கடலையும் பயன்படுத்தியும் நன்னீர் உயிரினச் செய்கை உற்பத்தி நூற்றுக்கு 100 ஆகவும்
விருத்தி செய்வதே எதிர்கால திட்டம்.
இதன் மூலம் நன்னீர் மீன்பிடி மற்றும் நீர்வாழ் கைத்தொழிலில் தற்பொழுது உற்பத்தி
செய்யப்படுகின்ற 40,560 மெட்ரிக் டொன் மீன் உற்பத்தி 2013 ஆம் ஆண்டு அளவில் 98,000
ஆயிரம் மெட்ரிக் தொன் வரை அதிகரிக்கச் செய்து மொத்த மீன் உற்பத்தி 686,000 மெட்ரிக்
டொன் வரை விருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டு அதற்காக பாரிய அளவிலான வேலைத் திட்டம்
தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 2011 உத்தேச மீன் உற்பத்தியில்
நூற்றுக்கு 74 வீதம் பெற்றுக்கொள்வதற்கு முடியுமாக இருந்ததை வெற்றியாக
சுட்டிக்காட்ட முடியும்.
தற்பொழுது மீனவர்களுக்கு நவீன தொழில்நுட்ப அறிவினை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான
திட்டங்களை செய்துள்ள இதன் கீழ் மீனவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் நாரா நிறுவனம்
மூலம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீன்கள் அதிகம் வசிக்கும் இடம் அல்லது மீன்களை
இனங்கண்டு மீனவர்களை அந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கும் இதே போன்று கடல் எல்லை
மீறப்படுவதன் காரணமாக கைதாகப்படுகின்ற மீனவர்களுக்கு கடல் எல்லையை
இனங்கண்டுகொள்வதற்கான ஒலி முறைமையை நவீன தொழில்நுட்பத்தின் மூலம்
அறிமுகப்படுத்துவதற்கும் சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் பதிவு செய்யப்படாத
Iuu-Illegle unreprted and unregisterd வள்ளங்கள் மீன் பிடிப்பதை
நிறுத்துவதற்கு வள்ளம் கண்காணிப்பு கட்டமைப்பு Vessel Monitoring System- VMS ஏற்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு வள்ளம் கண்காணிப்பு
கட்டமைப்பு பெற்றுக்கொள்வதற்காக இதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்ததுடன், இதற்காக
அதிகூடிய நிதியை செலவு செய்வதற்கு பிரேரிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது வள்ளங்கள் கண்காணிப்பு கட்டமைப்பு VMS பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு
நாடுகளில் விலை மனு மற்றும் பிரேரனைகள் கோரப்பட்டதுடன் தற்பொழுது பல்வேறு நாடுகளின்
சுமார் 22 குழுக்கள் விலைமனு பிரேரிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கு முன்னர்
பெற்றுக்கொள்ள முன்மொழியப்பட்டிருந்த VMS கட்டமைப்பின் விலைக்கூறுகளுக்கு மேல் 10
மடங்கு குறைவானதாகும். இதன் மூலம் எனக்கு தேவையாக இருந்தது, கடல் எல்லை நிர்ணயம்
செய்தல், வள்ளங்கள் அவதானிப்பு, மீனவளம் அதிகமாக காணப்படும் இடங்களை இனங்காணல்,
உதவி நல்கும் வள்ளங்ளை இனங்கண்டுகொள்ளல், எமது வள்ளங்கள் நமது கடல் எல்லையை தாண்டி
வேறு நாடுகளின் கடல் எல்லையை தாண்டும் பொழுது ஒலி எழுப்பி அறியச் செய்தல் பல்வேறு
தொடர்பாடல் முறைமையை பயன்படுத்தி அனைத்து வசதிகளும் உள்ளடங்கியதாக குறைந்த
விலைமனுவுடைய தரம் மற்றும் சேவை பங்களிப்பில் உயரிய எமது நாட்டிற்கு பயன்தரக்கூடிய
வள்ளங்கள் கண்காணிப்பு கட்டமைப்பை கொள்வனவு செய்வதாகும்.
அத்துடன் இதன் மூலம் ஒரு சில மீன்பிடி வள்ளங்கள் மூலம் செய்யப்படுகின்ற சட்டவிரோத
செயற்பாடுகளை நிறுத்துவதற்கும் குறைப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோன்று
தாய் களங்கள் Mother Vessels இரண்டினை முதற்கட்டமாக கொள்வனவு செய்து அந்த
தாய்களங்களின் மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்கின்ற நீண்ட நாட்கள் மீன்பிடி பணியில்
ஈடுபடுகின்ற வள்ளங்களுக்கு தேவையான மருந்துகள் எரிபொருள் பனிக்கட்டி உட்பட
அத்தியாவசிய பொருட்கள் அவர்களிடம் சென்று பெற்றுக்கொடுப்பதுடன், அவர்கள்
பிடிக்கின்ற மீன்களை தாய்க்களங்களின் மூலம் கரைக்கு கொண்டுவருவதற்கும் அறுவடை
செய்கின்ற மீனின் அளவினை பண்மடங்காக அதிகரிப்பதற்கும் துரிதப் படுத்துவதற்கும்
திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தாய்க்களங்கள் இரண்டினை நிர்மாணிப்பதற்கு
திட்டமிடப்பட்டுள்ளதுடன், ஒரு தாய்க்களம் தற்பொழுது சீனாவில் நிர்மாணப் பணிகள்
பூர்த்தியடையும் தருவாயில் உள்ளது மற்றைய தாய்க்களத்தை எனது வேண்டுகோளின் பேரில்
எனது அமைச்சின் கீழ் இயங்குகின்ற சினோர் நிறுவனம் மூலம் உற்பத்தி செய்வதற்கு
அனைத்து பணிகளும் செவ்வனே நிறைவு பெற்றுள்ளன.
இதேபோன்று குளிரூட்டப்பட்ட கடல் நீர் (Refrigerated Sea Water-(RSW)
குளிரூட்டி தொழில்நுட்பம் உள்ளடங்கியதாக முற்றுமுழுதாக இலங்கையில் உற்பத்தி
செய்யப்பட்ட முதலாவது நீல் தூண்டல் குதி 2(Long Lioner) அண்மையில் ஆழ்கடலில்
மீன்பிடி பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது. அந்த வள்ளத்தில் 1500 மீன் தூண்டில் அடங்கலான
நீல் தூண்டல் (Long Lioner) பயன்பாட்டின் மூலம் குணநலமிக்க மீன் அறுவடையை பாரிய
அளவில் பெருக்கிக்கொள்ள கூடியதாக உள்ளது. அதேபோன்று செய்மதி சமிக்ஞை அடங்கலான
பாதுகாப்பு கட்டமைப்பு (Radio Buoys) மற்றும் GSP பொருத்தப்பட்டிருப்பதன்
காரணமாக நவீன தொழில்நுட்பம் பயன்பாடு காரணமாக இந்த வள்ளம் மிகவும் உயர்த்தன்மை
கொண்டதாக இருக்கின்றது. அதேபோன்று வள்ளங்களில் பணியாற்றுகின்ற ஓட்டுனர் (மாலுமி)
உட்பட மீனவர்களுக்கு இரண்டு வார தொழில்நுட்ப பயிற்சி உட்பட சான்றுதல் பத்திரம்
மற்றும் உயிர் பாதுகாப்பு அங்கியும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மீன்பிடி கூட்டுத்தாபனத்திற்கு மீன்பிடி வள்ளங்கள் 90 கொள்வனவு
செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மீன்பிடி கூட்டுத்தாபனத்தினுடைய மீன்
உற்பத்தியை பன்மடங்காக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை மீன்பிடி
கூட்டுத்தாபனத்தின் விற்பனை கூடங்களின் எண்ணிக்கையை 250 வரை அதிகரிப்பதற்கு
எதிர்பார்க்கப்படுகின்றது. கிராமங்களில், நகரங்களில் விற்பனை கூடங்களை ஆரம்பிக்க
தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அச்சமயம் நுகர்வோருக்கு குறைந்த விலையில்
புரோட்டின் அடங்கிய மீன் பெற்றுக்கொடுப்பதற்கும், மீன் பாவனையை அதிகரிப்பதற்கும்,
மீன் விலையை சந்தை வாய்ப்பு போட்டியின் மூலம் இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின்
பங்களிப்புடன் சுமார் நூற்றுக்கு 50 குறைப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக
நாடு பூராகவும் அமைந்துள்ள. சதொச விற்பனை நிலையங்கள், பொருளாதார மத்திய நிலையங்கள்
மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் மீன்
உப விற்பனை கூடங்கள் ஆரம்பித்ததன் காரணமாக நகரங்களுக்கு போன்று கிராமங்களுக்கும்
இலகுவான விலைக்கு புதிய மற்றும் தரமான மீன்களை விநியோகிப்பதற்கும் தற்போது
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலாக மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் நடமாடும்
விற்பனை வாகனங்கள் நாடு பூராகவும் விநியோகிப்பதற்கும் நகரங்களை போன்று
கிராமங்களுக்கும் மீனை குறைந்த விலையில் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை வருட காலம் தொட்டு நாம் ஆரம்பித்த இந்த
வேலைத்திட்டங்கள் வெற்றியளித்துள்ளன. தற்பொழுது மீன்களின் விலை நூற்றுக்கு 30
வீதத்தால் குறைவடைந்துள்ளதுடன் மீன் பாவனையும் அதிகரித்துள்ளது. 2011ம் ஆண்டில்
நாம் இலக்கு வைத்த நாளாந்த மீன் பாவனை 38 கிராம் ஆயினும் தற்பொழுது நாளாந்த மீன்
பாவனை 35 ஆக இருப்பது நாம் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை இதேபோன்று அமைச்சின்
வழிகாட்டலின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள் குடியேறிய மீள்குடியேறி மீன்
பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களுடன் கூடிய
அவர்களை வலுவூட்டுவதற்கு தேவையான கடன் வசதிகள் பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான
நடவடிக்கைகள் தற்பொழுது எடுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் அண்மையில் வட பகுதியில்
முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் இடம்பெயர்ந்த 200
மீனவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் 200 இலட்சம் ரூபா கடன் உதவிகள்
கையளிக்கப்பட்டன. இதன் முதற்கட்டமாக 550 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை வங்கியுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘தியவர திரிய’ என்ற பாரிய
கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற கடனுக்காக அறவிடப்படுகின்ற வட்டியில்
நூற்றுக்கு 4 சதவீத பங்களிப்பினை அமைச்சின் மூலம் பொறுப்பேற்றதன் காரணமாக
கடனாளிகளுக்கு செலுத்தவேண்டியுள்ளது. நூற்றுக்கு 5.5 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை
மிகவும் குறைந்த வட்டியளவு மாத்திரமே இவ்வாறான வசதிகள் செய்து கொடுப்பதன் மூலம்
நாம் எதிர்பார்ப்பது மீனவர்களுக்கு தேவையான நவீன வள்ளங்களை கொள்வனவு செய்வதற்கும்
தம்வசமுள்ள மீன்பிடிவள்ளங்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் கட்டமைப்பினை
இணைத்துக்கொள்வதற்கும் ஊக்குவிக்கவும் ஆகும். மீனவர் மீன்பிடித்துறை
அபிவிருத்திக்காக இக்கடன்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
அத்துடன் யாழ்ப்பாணம், காரைநகர், முல்லைத்தீவு, கிளிநொச்சி, பிரதேசங்களில் உள்ள
மீனவர்களுக்கு தற்பொழுது வள்ளங்கள், வலைகள், சைக்கிள்கள், மீன்பெட்டிகள், வள்ளம்
என்ஜின்கள் சார்ஜர் உட்பட மீன்பிடி உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அத்துடன்
மீனவ குடும்பங்களை கட்டியெழுப்புதற்காக தேசிய மீனவர் மகா சம்மேளனம்
ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், அதன் கீழ் செயல்முறையான செயற்பாடுகள்
செயற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 23 மாவட்டங்களில் கிராமிய மீனவர் சங்கங்கள் 1067
ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதில் 80000ற்கும் மேல் அங்கத்தவர்கள் உள்ளனர். இந்த
மீனவர்களுக்கும் மற்றும் அவர்களின் குடும்பங்களின் உறுப்பினர்களுக்கும் பாடசாலை
சிறார்களுக்கும் உதவிகள் அன்பளிப்புகள் வழங்குவதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை
கட்டியெழுப்புவதற்கும் இந்த தேசிய மீனவர் மகா சம்மேளத்தின் பிரதான நோக்கமாகும்.
இதன் மூலம் மீனவ குடும்பங்களை எழுச்சிமிக்கவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மீனவர்களுக்காக புதிய ஓய்வூதிய முறைமையை இலங்கை வங்கியுடன் இணைந்து அண்மையில்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பல்வேறு நன்மைகள் அடங்கலாக வரலாற்றில் முதற் தடவையாக எமது
மீனவர்களுக்காக வாய்ப்புகள் கிடைக்கப்பெறவுள்ளன. அத்துடன் 55 வயதுக்கு முன்னர்
தேவையான வயதில் இந்த ஓய்வூதிய திட்டத்திற்கு பங்களிப்பு செய்ய முடியும். இந்த
ஓய்வூதிய திட்டத்திற்கு பங்களிப்பு செய்வற்கு மற்றும் தவணைப்பணம் செலுத்தும் முறைமை
பல்வேறாக அமைந்துள்ளது. 18 வயதில் ஓய்வூதிய பணத்திற்கு பங்களிப்பு செய்யவேண்டிய
மீனவர் ஒருவர் மாதாந்தம் 300 ரூபா செலுத்த வேண்டும். வயது வித்தியாச அடிப்படையில்
தவணைப் பணமும் வித்தியாசப்படும். 55 வயது பூர்த்தியடைந்தவுடன் 15 வருட காலம் வரை
10,000 ரூபா வீதம் மாதாந்தம் ஓய்வூதிய பணத்தை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம்
கிடைப்பதுடன், ஓய்வூதியம் பெற்றுக்கொள்ள அங்கத்துவம் பெற்றிருந்த மீனவர் இறக்கும்
தருவாயில் குறித்த காலம் வரை அவரின் மனைவிக்கு ஓய்வூதியப் பணம் உரித்துடையதாக
அமையும். இது தொடர்பான விபரங்கள் அனைத்து இலங்கை வங்கி கிளைகளிலும் கடற்றொழில்
நீரியல்வளங்கள் திணைக்களத்தில் அல்லது தேசிய நீர்வாழ் உயிரினச் செய்கை அதிகார
சபையின் பிரதான காரியாலயங்களில் அல்லது மாவட்ட காரியாலயங்களில் பெற்றுக்கொள்ள
முடியும். இதேபோன்று மீனவர்களின் உற்பத்திக்காக சிறந்த விலையினை
பெற்றுக்கொடுப்பதற்கும் பாவனையாளர் பொது மக்களுக்கு மீன் மலிவு விலையில் மீனை
பெற்றுக்கொடுப்பதற்கும் மீன் வியாபாரிகளுக்கு சிறந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி
கொடுப்பதற்கும் பேலியகொடை நகரில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையில் அதி நவீன மத்திய
மீன் விற்பனை கட்டிடத் தொகுதி அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் அண்மையில்
மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இது ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மீன் சந்தையில்
ஏற்படுகின்ற விற்பனை போட்டியின் மூலம் மீனின் விலையை குறைப்பதற்கும் சிறந்த மற்றும்
புதிய மீனை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் முடியுமாக உள்ளது. இதன் மூலம்
மஹிந்த சிந்தனை முன்னோக்கிய திட்டம் நனவாக்கப்பட்டு பாரிய சமுத்திரத்தினை
வளமாக்கிக்கொள்ளுவதற்கு நாம் தற்பொழுது திட்டமிட்டுள்ளோம். இதன்போது அதிமேதகு
ஜனாதிபதி இலங்கையை ஆசியாவில் ஆச்சர்யமாக்கும்போது எமது மீன்பிடி கைத்தொழில் இலங்கை
பொருளாதாரத்தின் ஆச்சர்யமாக அமையும்.
நான் மீன்பிடி அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் இந்தியா அல்லது வேறு நாடுகளின்
கடல் எல்லையை கடந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் எமது நாட்டை
சூழவுள்ள கடல் மைல் 200 வரை மாத்திரம் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும்படி அனைத்து
மீனவ சமூகத்தினரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தேன். இதன்படி எமது மீனவர்கள்
செயற்பட்டதன் காரணமான 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது 2011 ஆம் ஆண்டு நவம்பர்
மாதம் வரை மீனவர்கள் கைதாகுவது நூற்றுக்கு 60 வீதம் குறைவடைந்துள்ளது. மீன்பிடி
கைத்தொழிலை மேலும் மகிழ்ச்சிகரமான எதிர்காலத்தின் சமிக்ஞையாக மகிழ்ச்சியுடன்
சுட்டிக்காட்ட முடியும்.
2010ம் ஆண்டில் டிசம்பர் 31 வரையிலான காலத்தில் மீன்பிடி வள்ளங்கள் 74 மற்றும்
மீனவர்கள் 412 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்தனர். இது 2011ம் வருட
இக்காலப்பகுதியில் மீன்பிடி வள்ளங்கள் 29 மற்றும் மீனவர்கள் 144 வரை நூற்றுக்கு 60
சதவீதம் குறைவடைந்துள்ளது. இதனை இந்திய, இலங்கை அந்நியோன்னிய வளர்ச்சிக்கு காரணியாக
அமையும்.