ஹிஜ்ரி வருடம் 1431 ர.அவ்வல் பிறை 22
விரோதி வருடம் மாசி மாதம் 26ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, MARCH 10, 2010
நைஜீரியாவில் மதக்கலவரம்: ஐநூறு பேர்வரை உயிரிழப்பு
நைஜீரியாவில் மதக்கலவரம்:
ஐநூறு பேர்வரை உயிரிழப்பு
வீடுகள் சொத்துக்கள் தீக்கிரை; இராணுவ அதிகாரிகளுடன் ஜனாதிபதி பேச்சு
அபுஜா
மார்ச். 09
ஏ.பி.
நைஜீரியாவில் ஏற்பட்ட மதக்கல வரத்தில் குறைந்தது ஐநூறு பேர் வரை பலியாகினர். கடந்த
ஞாயிற் றுக்கிழமை கிறிஸ்தவர்கள், முஸ்லிம் களிடையே இந்த மோதல் நடந்தது.
ஒருவரையொருவர் பழிதீர்க்கும் பொருட்டு மிக மோசமான முறை யில் கலகக்காரர்கள் நடந்து
கொண் டனர்.
வீடுகளைத் தீக்கிரையாக்கினர். சொத்துக்கள், உடமைகளைச் சேதப்படுத்தினர். அச்சம்
காரணமாக வெளியில் ஓடியோரை பலாத்கார மாகப் பிடித்து இழுத்துக் கழுத்து களை வெட்டிக்
கொன்றனர். பெண் கள், குழந்தைகள், வயோதிபர் என்ற பாரபட்சம் காட்டாது மிக மோச மான
கொலைகளைச் செய்தனர். நைஜீரியாவின் மத்திய மாகாண த்தில் இந்த மத மோதல்கள் நட ந்தது.
இவை ஏனைய மாகாணங் களில் பரவுவதைத் தடுக்க அரசாங் கம் உரிய நடவடிக்கையில் இறங்கி யது.
பெருமளவான பொலிஸார், இரா ணுவத்தினர் ஏனைய மாகாணங்க ளின் எல்லைகளில் குவிக்கப்பட்டு
கடுமையான கண்காணிப்பு நடவடிக் கைகளில் இறங்கினர். ஜனவரி மாதம் நைஜீரியாவில் ஏற்பட்ட
இனக்கல வரத்துக்குப் பழிவாங்கும் நோக்கு டன் இக்கலவரம் தூண்டிவிடப்பட் டதாக
நம்பப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன் இதற்கான அறிகுறிகள் தென்பட்டதாக கிராம
வாசிகள் கவலை தெரிவித்தனர்.
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வாழும்
நைஜீரியா வில் அடிக்கடி இவ்வாறான மோத ல்கள் இடம்பெறுகின்றன. இது போன்ற மிக மோசமான
வன்முறை களைச் சிலர் அரசியல் நோக்கங்க ளுக்காகத் தூண்டிவிடுவதாகக்
குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுவரைக்கும் சட்டம், ஒழுங்கு அமைதி ஏற்பட்டதாகத் தெரியவில் லையென அங்குள்ளோர்
கூறியது டன் பொலிஸார் பக்கச்சார்பாக நடந்து கொண்டதாகவும் குறைகூறி னர்.
அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இக்கலவரத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
அநியாயக்காரர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வருமாறு ஹிலாரி கிளிண்டன்
நைஜீரிய அரசைக் கேட்டுள்ளார்.
பலியானோரின் சடலங்களை பொதுமக்கள் அடக்கம் செய்தனர். ஐநூறு சடலகங்களைப் புதைத்ததாக
அறிவிக்கப்பட்டது. பொதுவான குழி தோண்டப்பட்டுப் பிரேதங்கள் அடக்கம் செய்யப்பட்டன.
நைஜீரிய ஜனாதிபதி உட்பட முக்கிய தலை வர்கள் இராணுவ அதிகாரிகளுடன் அவசர
சந்திப்பொன்றில் கலந்து கொண்டனர்.