ஹிஜ்ரி வருடம் 1431 ர.அவ்வல் பிறை 22
விரோதி வருடம் மாசி மாதம் 26ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, MARCH 10, 2010
தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட முனைந்த தலிபான்கள் சுட்டுக்கொலை
தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட
முனைந்த தலிபான்கள் சுட்டுக்கொலை
கோஸ்ட்
மார்ச். 09
ஏ.எப்.பி.
ஆப்கானிஸ்தானில் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட முனைந்த இர ண்டு தலிபான்களைப் பொலிஸார்
சுட்டுக்கொன்றனர். பெண்களின் (பர்தா) ஆடையை அணிந்து கொண்டு இவ்விருவரும்
அரசாங்கத்தால் கைவிடப்பட்ட கட்டடமொன்று க்குள் நுழைந்தனர். இக்கட்டடத்திலி ருந்து
அருகிலுள்ள அரச அலுவல கங்கள், முக்கிய இடங்களைத் தாக் குவதே இவர்களின் நோக்கமாகும்.
பாகிஸ்தானுக்கு அருகிலுள்ள கோஸ்ட் என்ற இடத்தில் திங்க ட்கிழமை இச்சம்பவம் நடந்தது.
இப்பிரதேசம் தலிபான்களின் செல் வாக்குள்ள பகுதியாகும். பெண்க ளின் ஆடைகள் அணிந்தவாறு
கைத் துப்பாக்கிகள், குண்டுகளை இவர் கள் கொண்டுவந்தனர்.
கைவிடப்ப ட்ட அரசாங்கத்தின்
கட்டடத்துக்குள் தலிபான் சந்தேக நபர்கள் நுழைந் ததை அவதானித்த ஆப்கான் பொலி ஸார்
திடீரென அக்கட்டடத்தைச் சுற்றி வளைத்தனர். இதையடுத்துப் பொலிஸார் தாக்குதல் தொடுத்
தனர்.
கட்டடத்துக்குள் மறைந்திருந்த தலிபான்களில் ஒருவர் குண்டை வெடிக்கச் செய்தார். இதில்
நான்கு பொலிஸார் காயமடைந்தனர். வெளி நாட்டு உளவுப் படையினர் தங்கியி ருக்கும்
கட்டடத்தையே தாங்கள் தாக்க முற்பட்டதாக தலிபான்கள் இணையத்தளத்தில் செய்தி வெளியி
ட்டனர்.