ஹிஜ்ரி வருடம் 1431 ர.அவ்வல் பிறை 22
விரோதி வருடம் மாசி மாதம் 26ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, MARCH 10, 2010
அம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு விழா
அம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய
பாடசாலையின் இல்ல விளையாட்டு விழா
(அம்பாந்தோட்டை தினகரன் விசேட நிருபர்)
அம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள்
எதிர்வரும் 22 ஆம், 24 ஆம், 25 ஆம் திகதிகளில் அம்பாந்தோட்டை நகர சபை பொது
விளையாட்டு மைதானத்தில் அதிபர் எம்.
இஸட். எம். ஸாஹிர் தலைமையில் நடைபெறவுள்ளது.
ரூபி, எமரல்ட், சபயர் ஆகிய இல்லங்களுக்கிடையில் நடைபெறவுள்ள இவ்விளையாட்டுப் போட்டி
நிகழ்ச்சிகளில் பிரதம அதிதியாக அம்பாந்தோட்டை மாவட்ட வர்த்தக சம்மேளனப் பணிப்பாளர்
நாயகம் அஸ்மி தாசிம், கெளரவ அதிதிகளாக தென் மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் மதனியா
கலீல், அம்பாந்தோட்டை வலயக் கல்விப் பணிப்பாளர் வை. கே. பியசேன, சிறப்பு அதிதிகளாக
கோட்டக் கல்விப் பணிப்பாளர் நாலினி, உதவிக் கல்விப் பணிப்பாளர் பீ. ஜலால்தீன்
ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
சுவட்டு மைதான நிகழ்வுகளும், பரிசளிப்பு, மாணவ மாணவிகளின் உடற் பயிற்சி கண்
காட்சியும், பரிசளிப்பு விழாவும் 25 திகதி மாலை நடை பெறவுள்ளது.