ஹிஜ்ரி வருடம் 1431 ர.அவ்வல் பிறை 22
விரோதி வருடம் மாசி மாதம் 26ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, MARCH 10, 2010
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் தீ
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் தீ
(லோரன்ஸ் செல்வநாயகம்)
நுரைச்சோலை அனல் மின் நிலைய நிர்மாணப் பணிகள் இடம் பெறும் பகுதியில் நேற்றுத் தீ
விபத்தொன்று இடம்பெற்றதுடன் சில மணித்தியாலங்களில் அதனைக் கட்டுப்படுத்த முடிந்ததாக
மின்வலு எரிபொருள் அமைச்சு தெரிவித்தது.
மேற்படி நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனத்திற்குச் சொந்தமான
களஞ்சியசாலையொன்றே தீப்பிடித்துள்ளதாகவும் இவ்விபத்தில் எவருக்கும் எவ்வித
பாதிப்புமில்லை யெனவும் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
இத் தீவிபத்தில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப் பட்டுவருவதுடன்
தீ விபத்துக்கான காரணம் பற்றி ஆராய்வதற்காக சீன நிறுவனத்தின் குழுவொன்று விசாரணைக
ளில் ஈடுபட்டு வருவதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார். (ஸ-ர-ஏ-து)