வவரு. 78 இல.55

ஹிஜ்ரி வருடம் 1431 ர.அவ்வல் பிறை 22
விரோதி வருடம் மாசி மாதம் 26ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, MARCH 10, 2010

தர்கா நகரில் பரபரப்பு: வர்த்தகர் சுட்டுக் கொலை;

தர்கா நகரில் பரபரப்பு: வர்த்தகர் சுட்டுக் கொலை;

மோட். சைக்கிளில் வந்தோர் கைவரிசை

தர்காநகர், மீரிபன்னையைச் சேர் ந்த முஸ்லிம் வர்த்தகரொருவர் நேற்று முன்தினமிரவு சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.

மீரிப்பன்னையில் வசிக்கும் முஹ ம்மத் செய்னுலாப்தீன் அரூஸ் (வயது 44) என்ற பெயருடைய வர்த் தகரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

அளுத்கம நகரில் கடையொன்றை நடாத்தி வரும் இவர், சம்பவ தின மிரவு 7.30 மணியளவில் தமது மோட்டார் சைக்கிள் வீட்டுக்குச் சென்றுள்ளார். இவர் தர்கா நகர் சந்தியிலிருந்து தமது வீட்டுக்குச் செல்லும் பாதையில் மோட்டார் சைக்கிளில் திரும்புகையில், இவரைப் பின் தொடர்ந்து மற்றொரு மோட் டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்த இனம் தெரியாத இருவரில் ஒருவர் இவர் மீது துப்பாக்கி பிர யோகம் செய்துள்ளதுடன், அவர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

இவரது தலைப் பகுதியிலேயே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்ப ட்டுள்ளது. இதனால் படுகாயமுற்ற இவர் உடனடியாக களுத்துறை, நகொட பொது வைத்தியசாலை க்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். இருப்பினும் அங்கேயே அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தை யடுத்து பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இவர் சுமார் 8 இலட்சம் ரூபா பணத்துடன் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்ததா கவும், அப்பணத்தைக் கொள்ளை யடிக்கும் நோக்கிலேயே இவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டி ருக்கலாம் என்றும் ஆரம்ப விசார ணைகளில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான புலன் விசாரணைகளை அளுத்கம பொலி ஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இச்சம்பவத்தில் உயரிழந்த முஹம்மத் செய்னு லாப்தீன் அரூஸின் ஜனாஸா தர்கா நகர் பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் மையவாடியில் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •