வவரு. 78 இல.55

ஹிஜ்ரி வருடம் 1431 ர.அவ்வல் பிறை 22
விரோதி வருடம் மாசி மாதம் 26ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, MARCH 10, 2010

இரு பாதாள உலககோஷ்டியினர் பொலிஸாரால் சுட்டுக் கொலை

இரு பாதாள உலககோஷ்டியினர் பொலிஸாரால் சுட்டுக் கொலை

பாதாள உலகத்தை சேர்ந்த இருவர் நேற்று பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். குருநாகலையில் படல்கமுவ காட்டுப் பகுதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி சமரின் போதே இவர்கள் கொல்லப்பட்டனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

படல்கமுவ காட்டுப்பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் பாதாள உலக கோஷ்டியை சேர்ந்த இருவர் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. பொலிஸ் குழுவொன்று அங்கு விரைந்தது. பாதாள உலக கோஷ்டியினரை பிடிப்பதற்கு பொலிஸார் முற்பட்ட போது இரு தரப்பினருக்குமிடையே துப்பாக்கி சமர் ஏற்பட்டது.

இந்தச் சமரின் போது பாதாள உலக கோஷ்டியினர் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட இருவரும் நேற்று முன் தினம் பன்னல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்ததாகவும், அன்றைய தினம் அவர்கள் இருவரும் பொலிஸில் இருந்த துப்பாக்கியொன்றை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று காட்டுப் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் மறைந்திருந்ததாக பொலிஸார் கூறினர்.

கொல்லப்பட்ட பாதாள உலக கோஷ்டி யினர் கொழும்பில் புளூமெண்டலை சேர்ந்த சம்பத் டயஸ் மற்றும் சரித் சதுரங்க என்றும் இவர்கள் இருவரும் ஏழு மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்ட சுராஜ் தனுஷ்க என்ற பிரபல பாதாள உலக தலைவருடன் நெருங்கிய சகாக்கள் என்றும் பொலிஸார் மேலும் கூறினர்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •