ஹிஜ்ரி வருடம் 1431 ர.அவ்வல் பிறை 22
விரோதி வருடம் மாசி மாதம் 26ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY, MARCH 10, 2010
வரட்சியை எதிர்கொள்ள மக்கள் வழங்கும் ஒத்துழைப்பு
வரட்சியை எதிர்கொள்ள
மக்கள் வழங்கும் ஒத்துழைப்பு
நாட்டில் வரட்சி உருவாகியுள்ளது. நீர் நிலைகள் வற்றி வருகின்றன. கிணறுகளில்
நீர்மட்டம் குறைந்து வருகிறது. நாட்டின் சில இடங்களில் குடிநீருக்காக மக்கள்
அலைகின்றனர். விவசாயச் செய்கையிலும் பாதிப்பு ஏற்படலாமென அஞ்சப்படுகிறது.
இலங்கை மின்சார சபை இப்போதிருந்தே மக்களை அறிவுறுத்தத் தொடங்கியுள்ளது.
மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவ தில் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள்
முழுமையான ஒத்து ழைப்பு வழங்க வேண்டுமென மின்சார சபை கோரிக்கை விடு த்துள்ளது.
தற்போதைய வரட்சியான காலநிலை தொடருமா னால் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது
அவசியம். இல்லையேல் மின்சாரவெட்டு தவிர்க்க முடியாததாகி விடும்.
அதேசமயம் தண்ணீரையும் மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய நிலைமை இன்றுள்ளது.
இல்லையேல் தண்ணீர் மாத்திரமின்றி மின்சாரமும் விரைவில் பற்றாக்குறையான நிலை மைக்குச்
சென்று விடலாம். எனவே மக்கள் இவ்விடயத்தில் முடிந்தளவு ஒத்துழைப்பு வழங்க முன்வர
வேண்டும்.
எமது நாடு வருடாந்த மழைவீழ்ச்சியை கிரமமாகப் பெற்று வரு கின்ற நாடு. இதன் காரணமாக
விவசாயத்துக்கு மிகவும் பொரு த்தமான காலநிலையைக் கொண்ட நாடாக இலங்கை விளங்கு கிறது.
அக்கால மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஏராளமான குளங்களையும் எமது நாடு
கொண்டுள்ளதனால் நெற்செய் கைக்குப் பேருதவியாக உள்ளது.
எனினும் பருவப்பெயர்ச்சி மழை இலங்கையில் சற்றுத் தாமத மாகினால் கூட வரட்சி
தலைகாட்டத் தொடங்கி விடுகிறது. மின் சாரப் பற்றாக்குறையும் நீர்ப்பற்றாக்குறையும்
ஆரம்பித்துவிடு கின்றன. இதுவொரு பாரிய பிரச்சினையாகி விடுகிறது.
வரட்சியான காலப் பகுதியில் நீர்த்தட்டுப்பாட்டுக்கு முகம் கொடு ப்பதை விட மின்சாரப்
பற்றாக்குறையை எதிர்கொள்வதே பெரும் பிரச்சினையாகி விடுகிறது. இதற்குக் காரணம்
மின்சார உற்பத்திக்காக நீர்நிலைகளையும் நம்பியிருக்க வேண்டிய தொரு நிலைமையில் நாம்
உள்ளதுதான்.
இலங்கையின் நீர்முகாமைத்துவத்தைப் பொறுத்தவரை பெரிதளவில் குறை கூறுவதற்கில்லை.
ஆனாலும் அக்கால மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட நீர்ப்பாசனக் குளங்களே இன்னும்
பிரதான குளங்களாக உள்ளன. புராதன காலத்துக்குப் பின்னரான காலப் பகுதியில் பாரிய
நீர்ப்பாசனக் குளங்கள் இலங்கையில் அமைக்கப்படவில்லை. இதனாலேயே வரட்சியான வேளை களில்
விவசாயத்துக்கான நீரைப் பெறுவதில் நாம் சிரமப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில்
புதிதாக நீர்ப்பாசனக் குளங் களை அமைப்பதுடன், தூர்ந்து போன குளங்களைப் புனர மைக்க
வேண்டிய தேவையும் உள்ளது.
இது தவிர, மின்சார உற்பத்திக்காக நீர்த் தேக்கங்களையும் நம்பி யிருக்கும் நிலைமையை
மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் தீவி ரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கை
யில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் அனல்மின் நிலை யங்களை இதற்கு உதாரணமாகக்
கூறலாம்.
உலகின் பல்வேறு நாடுகள் நீர்மின்சார உற்பத்தியை முற்றாகக் கைவிட்டுள்ளன.
அனல்மின்சாரம், அணு மின்சாரம் சூரிய சக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்ற
நவீன தொழில் நுட்பங்களை நோக்கி உலகம் முன்னேறி வருவதனால் நாமும் புதிய
தொழில்நுட்பங்களில் காலடிபதித்துள்ளோம்.
புவியின் காலநிலை மாற்றமடைந்து வருவதனால் நீர்மின்சார உற் பத்தியை எதிர்காலத்தில்
நம்பியிருக்க முடியாதென்பதனாலேயே புதிய முறையிலான மின்சார உற்பத்தியை நோக்கி நாமும்
முன் னேறுகிறோம். இலங்கையில் காற்றாலைகள் மூலமான மின்சார உற்பத்தியும் அபிவிருத்தி
செய்யப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அனல்மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி போன்றவை முழு மையாக செயலுருப் பெறுவதற்கு
சில காலம் செல்லலாம். அதுவரை எரிபொருள் மூலமான மின்னுற்பத்தியிலேயே இல ங்கை தற்போது
தங்கியுள்ளது. எரிபொருள் மூலமான மின்சார உற்பத்திக்கு பெரும் செலவினம் ஏற்படுவது
தெரியாத விடய மல்ல. அதனாலேயே மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதில் சிக்கல்களை
எதிர்நோக்க வேண்டியுள்ளது.
வரட்சியினால் ஏற்படுகின்ற எதிர்விளைவுகளை எமது மக்கள் நன்கு புரிந்து கொள்வது
அவசியம். நாட்டின் நலன்கருதி தண் ணீர், மின்சாரம் போன்றவற்றில் சிக்கனத்தைக்
கடைப்பிடிப் பதே மக்கள் வழங்குகின்ற ஒத்துழைப்பாகும்.