வவரு. 78 இல.55

ஹிஜ்ரி வருடம் 1431 ர.அவ்வல் பிறை 22
விரோதி வருடம் மாசி மாதம் 26ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, MARCH 10, 2010


வட பகுதிக்கு 30 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

வட பகுதிக்கு 30 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

நாட்டில் தற்போது சிறந்ததொரு சூழல் காணப்படுவதினால் வடக்கில் சுற்றுலாத்துறையினரின் வருகை அதிகரித்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த வகையில் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் சுற்றுலாத்துறையினரின் எண்ணிக்கை சுமார் 30 இலட்சத்திற்கும் அதிகமாக இருந்ததால் தெரிவிக்கப்படுகின்றது.

அமைதியான சூழல், பயங்கரவாதமற்ற மன தைரியம், சுதந்திரமான போக்குவரத்து வசதிகள் இவ்வாறான காரணங்களும் உல்லாசதுறையினர்களினது வருகைக்கு மற்றுமொரு காரணமாக அமைந்திருப்பதாகவும் அமைச்சினது உயர் அதிகாரி குறிப்பிட்டார்.

இந்த சுற்றுலாத்துறையினது வருகையின் காரணமாக யாழ். பிரதேசத்திலுள்ள வர்த்தகர்கள் மற்றும் இன்னோரன்ன கைப்பணிப் பொருள் உற்பத்தியாளர்கள் பலர் பல அபிவிருத்திகளை கண்டு வருவதாகவும் அதிகாரி மேலும் சுட்டிக்காட்டினார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •