வவரு. 78 இல. 32

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 24
விரோதி வருடம் தை மாதம் 27ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, February 09, 2010

உக்ரைன் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி?

உக்ரைன் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி?

உக்ரைனில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு வேட்பாளரிடையேயும் கடுமையான போட்டி நிலவுகின்றது. இதுவரை முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர் யனுகோவிச் மிகச் சொற்ப வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக ஊடகங்கள் அறிவித்தன. இதைப் பிரதமர் நிராகரித்ததுடன் மக்களுடன் வீதியில் இறங்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார்.

உக்ரைனில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பாக யனுகோவிச், ஆளும் கட்சி காபந்துப் பிரதமர் டைமோ ஷென்கோ ஆகியோர் போட்டியிட்டனர்.

முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர் மிகச் சொற்ப வித்தியாசத்தில் வெற்றி பெறலாம் என முன்னறிவிப்புச் செய்தன.

இதனால் உக்ரைனில் கடும் பதற்றம் எழும் நிலை தோன்றியுள்ளது. இந்நிலை உக்ரைனில் முதலிடவுள்ள பெரும் வர்த்தகர்களின் மன நிலையைப் பாதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. நியாயம் வேண்டி நீதிமன்றம் செல்லவும் இருதரப்பு வேட்பாளர்களும் தயாராகியுள்ளனர்.

ஐரோப்பிய யூனியன், ரஷ்யாவின் தயவையும் இவ்விருவரும் நாடவுள்ளனர். ஐரோப்பிய யூனியனின் உதவியை நாடவே பிரதமர் விருப்பமுடையவராக உள்ளார். மக்களை வீதிக்கு அழைத்து ஆர்ப்பாட்டம் செய்யும் நிலையில் பிரதமரில்லை. 2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் எதிர்க்கட்சி வேட்பாளர் யனுகோவிச்சி வெற்றி சூறையாடப்பட்டது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •