ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 24
விரோதி வருடம் தை மாதம் 27ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, February 09, 2010
தலைமையின் முடிவுக்கமையவே அ.இ.மு.கா தேர்தலில் போட்டி
தலைமையின் முடிவுக்கமையவே
அ.இ.மு.கா தேர்தலில் போட்டி
தனிப்பட்ட முடிவுக்கு கட்டுப்படோம் - சுபைர்
பாராளுமன்றத் தேர்தலில் தனித்தா? அல்லது அரசுடன் இணைந்தா? போட்டியிடுவது என்பது
தொடர்பில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் என்ன தீர்மானத்தை
எடுக்கின்றதோ அதனடிப்படையிலேயே போட்டியிடுவோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,
அ. இ. மு. கா. பிரமுகருமான எம். எஸ். சுபைர் தெரிவித்தார்.
அ. இ. மு. கா. பொதுத் தேர்தலில் தனித்தா? அல்லது ஐ. ம. சு. மு. சின்ன த்திலா
போட்டியிடும் என்ற கேள்விக்கே மாகாண சபை உறுப்பினர் சுபைர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சுபைர் :-
பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்த கட்சியின் தலைமைத்துவம் மிக
விரைவில் கூடி தீர்மானிக்கும். அந்த முடிவின் அடிப்படையிலேயே வடக்கு, கிழக்கு
மாகாணங்களில் போட்டியிடுவோம்.
தனிப்பட்ட சிலர் எடுக்கும் முடிவுகளுக்கு நாம் கட்டுப்படப் போவதில்லை.
தலைமைத்துவத்தின் முடிவே எமக்கு அவசியமும், முக்கியமுமாகும்.
வடக்கு, கிழக்கில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டுமென்பதில் கட்சி
உறுதியாகவுள்ளது. அவ்வாறான அடிப்படையிலேயே கட்சி தீர்மானத்தை மேற்கொள்ளும்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது கட்சி தலைமைத்துவம் எடுத்த தீர்க்கமான முடிவு
எமக்கு வெற்றியைத் தந்தது.
மாகாண சபைக்கு கட்சி சார்பாக மூவர் தெரிவானோம் என்பதை இச்சந்தர்ப்பத்தில் உறுதியாக
ஞாபகப்படுத்த விரும்புகின்றேன் என்றும் சுபைர் குறிப்பிட்டார்.