வவரு. 78 இல. 32

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 24
விரோதி வருடம் தை மாதம் 27ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, February 09, 2010

ஆசை வீணானது

ஆசை வீணானது

இங்கிலாந்தில் இரகசியமாக கோட்டை போல் ஒரு வீடு கட்டி அதில் நான்கு ஆண்டுகளாக வாழ்ந்து வந்த விவசாயி ஒருவர், அந்த கோட்டை வீடு இடிக்கப்படக் கூடாது என்று முறையிட்டு உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் தோற்றுள்ளார்.

ராபாட், பிட்லர் என்ற இந்த விவசாயி இரண்டு வருடம் உழைத்து, டூடர் கோட்டை பாணியில், கோட்டைச் சுவர் கண்காணிப்பு கோபுரம், பீரங்கிகள் எல்லாம் வைத்து ஒரு வீட்டைக் கட்டியிருந்தார். ஆனால் வைக்கோல் போர்களைக் கொண்டு மூடி அதனை மறைத்து வைத்திருந்தார்.

கோட்டை போல வீடு கட்ட வேண்டும் என்ற தனது விண்ணப்பத்தை அரசு அதிகாரிகள் பதில் தரத் தவறியதை அடுத்தே தான் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்ததாக அந்த விவசாயி கூறுகிறார்.

ஆனால் மூடி மறைத்து ஏமாற்றி இவர் பலன் அடைவதை அனுமதிக்க முடியாது என்றும், ஆகவே இவர் கட்டிய கோட்டை வீடு இடிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •