ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 24
விரோதி வருடம் தை மாதம் 27ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, February 09, 2010
இலவச மருத்துவ சேவையில் மற்றொரு வரப்பிரசாதம்
இலவச மருத்துவ சேவையில்
மற்றொரு வரப்பிரசாதம்
கிராமிய வைத்தியசாலைகளில் மருத்துவ ஆய்வு கூட வசதிகள் இல்லாதிருப்பது பெரும் குறை
யாகும். குருதி மற்றும் சிறுநீர் சம்பந்தப் பட்ட சாதாரண பரிசோதனைகளைக் கூட செய்து
கொள்ள முடியாத ஏராளமான வைத்தியசாலைகள் கிராமப் பகுதிகளில் காணப்படுகின்றன.
அவ்வைத்தியசாலைகளை நாடி வரும் நோயாளர்கள் சாதாரண காய்ச்சல் வியாதிக்குக் கூட இரத்தப்
பரிசோதனைக்காக தூர இடங்களில் உள்ள நகர வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படுவது வழமை யாக
உள்ளது.
இதனால் அந்நோயாளர்களுக்கு வீண் அலைச்சலும் கால தாமதமும் ஏற்படுகின்றன. அதேசமயம்
அக்காய்ச் சலானது டெங்கு போன்ற கொடிய நோயாக இரு ப்பின், காலதாமதம் காரணமாக உரிய
சிகிச்சையை தக்க வேளையில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை மையும் ஏற்படுகிறது.
டெங்கு நோய்க்குள்ளான பலர் சிகிச்சையைத் தாமதப்படுத்திய காரணத்தினாலேயே பரிதாபமாக
உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் டெங்கு நோயானது தீவிரமாகப் பரவி வரும்
இன் றைய வேளையில் இரத்தப் பரிசோதனையானது மருத்துவ சிகிச்சையில் முக்கியத்துவம்
பெறுகிறது.
இத்தகையதொரு சிக்கலுக்குத் தீர்வு காணும் நோக்கில் சுகாதாரப் பராமரிப்பு,
போஷாக்குத்துறை அமைச்சு தற்போது விசேட திட்டமொன்றைக் கொண்டுவந்துள்ளது.
ஆய்வுகூட வசதி இல்லாத அரசாங்க வைத்திய சாலைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக வருகை தரும்
நோயாளர்களுக்குரிய குருதி மற்றும் சிறுநீர் மாதிரிகளை உடனுக்குடன் தனியார்
ஆய்வுகூடங் களுக்கு அனுப்பி பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கைகளைப் பெறுவதென்பதே
அமைச்சின் முடிவாகும்.
இதற்கான செலவினத்தை அரசாங்கமே பொறுப் பேற்கவிருக்கிறது. ஆய்வுகூடப் பரிசோதனைகளு
க்கென செலவாகும் பணத் தொகைக்கான நிதி யொதுக்கீடுகளை குறித்த வைத்தியசாலைகளுக்கு
வழங்குவதற்கும் அமைச்சு முடிவு செய்துள்ளது.
பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களைப் பொறுத்தவரை இந்நடவடிக்கையை பெரும் வரப்
பிரசாதமென்றே கூறவேண்டும். அதுமாத்திரமன்றி வறிய நோயாளர்கள் குருதி மற்றும் இரத்தப்
பரிசோதனைகளுக்கென பெரும் பணத்தைச் செலவிட வேண்டிய அவசியமும் இல்லை. மருத் துவ
பரிசோதனை அறிக்கைகள் நோயாளர்களின் காலடிக்கே வந்துசேருவதென்பது பெரும் விடயம்.
இதுபோன்ற நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமிடத்து அரசாங்கத்துக்கு ஏற்படப்போகும் செலவும்
பெரி யது. இலவச மருத்துவத்துக்காக அரசாங்கம் ஏற்க னவே பெரும் தொகையைச் செலவிட்டு
வருகி ன்ற நிலையில், தற்போது மேலதிக செலவின மொன்றை எதிர்நோக்கியுள்ளது.
நோயாளர்களுக்கு இலவசமாகவும் தங்குதடையின் றியும் மருத்துவ சேவையை வழங்க வேண்டு
மென்பதே அரசாங்கத்தின் எண்ணமாகும். அரசின் இச்சேவையை பொறுப்புணர்வுடன் பயன்படுத்திக்
கொள்வது மக்களின் பொறுப்பாகும்.