ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 24
விரோதி வருடம் தை மாதம் 27ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, February 09, 2010
வறட்சி காரணமாக வேளாண்மை பாதிப்பு
திருகோணமலையில்
வறட்சி காரணமாக
வேளாண்மை பாதிப்பு
(கந்தளாய் தினகரன் நிருபர்)
திருகோணமலை மாவட்டத்தில் தற்பொழுது நிலவி வரும் வரட்சி யான காலநிலை காரணமாக வேளா
ண்மைப் பயிர்கள் பாதிப்படைந்துள் ளன. கந்தளாய், கிண்ணியா, மூதூர், புல்மோட்டை,
முள்ளிப் பொத் தானை, ஹொரவப்பொத்தானை முதலான பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்ட
வேளாண்மைப் பயிர்களே மழையின்றி பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேட்டு நிலப் பயிர்களான கத்தரி, மிளகாய், தக்காளி, சோளம், உள்ளிட்ட பல பயிர்களும்
மழையின்றி பாதிப்படைந்து வருவதாக பயிர்ச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
கந்தளாய் பிரதேசத்தில் வட்டுக்கச்சி, ஆரியபுர, ஜயந்திபுர, வானால, சீனிஆலை முதலான
பகுதிகளில் செய்கை பண்ணப்பட்ட பயிர்களும் நீரின்றிப் பாதிப்படைந்து வருவதாக
விவசாயிகள் தெரிவிக்கின்றார்கள். (ஐ-எ)