வவரு. 78 இல. 32

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 24
விரோதி வருடம் தை மாதம் 27ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, February 09, 2010

ரஷ்ய மக்கள் நட்புறவு பல்கலைக்கழகத்தின் ஐம்பதாண்டு பூர்த்தி விழாவும், கலாசார விழாவும் பல்கலைக்கழகத்தின் மொஸ்கோ கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பல்கலைக்கழக மாணவர்கள் மலர் செண்டு கொடுத்து வரவேற்பதைக் காணலாம்.
(படம்: சுதத் சில்வா) (ர-ஜ)

 

மன்னார் மீன்பிடித்தடை
முற்றாக நீக்கம்

மீள் எழுச்சித் திட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ. 12 கோடி ஒதுக்கீடு

மன்னார் மாவட்டத்தில் மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்பொழுது முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று தெரிவித்தார்.மீனவ தொழிலாளர்களுக்கு இதுவரை அமுலில் இருந்த பாஸ் நடைமுறை மற்றும் கெடுபிடிகளும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன் இந்த மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

விவரம் »

 

யுத்தத்தால் பிரிந்துள்ள மனங்களை ஒன்றிணைத்து இலங்கையில் சொர்க்கத்தை
உருவாக்க உதவுங்கள்

உலக நாடுகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு

யுத்தத்தினால் பிரிந்துள்ள மனங்களை மீள ஒன்றிணைத்து இலங்கையை சிறிய சொர்க்கமாக உருவாக்கும் நடவடிக்கைக்கு உலக நாடுகள் தம்முடன் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்ய பல்கலைக்கழக நிகழ்வொன்றில் சிறப்பதிதியாகக் கலந்துகொண்டு கல்விமான்கள் மத்தியில் உரைநிகழ்த்திய போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு அழைப்பு விடுத்தார். உலகம் முழுவதிலும் சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்தை ஒழித்து இலங் கையில் சமாதானத்தையும் அபிவிருத்தி யையும் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

விவரம் »
 

சரத் பொன்சேக்கா கைது

முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க் கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளருமான சரத் பொன்சேக்கா இராணுவ பொலிஸாரினால் நேற்றிரவு கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.இராணுவ குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே விசாரணைகளுக்காக இவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விவரம் »